Thursday, October 22, 2026

உள்நாடு

newsbar

மலையகம்

இந்தியா

newsbar
newsbar

பாகிஸ்தான் செல்கிறது இலங்கை அணி – ஒக்டோபர் 9 முதல் கிரிக்கெட் தொடர்!

newsbar

பாகிஸ்தான் செல்கிறது இலங்கை அணி – ஒக்டோபர் 9 முதல் கிரிக்கெட் தொடர்!

இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுக்கு மேற்கொள்ளும் நீண்ட சுற்றுப்பயணம் ஒக்டோபர் 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் முதற்கட்டமாக 3 போட்டிகள் கொண்ட T20 சர்வதேச தொடர் நடைபெறவுள்ளது.

இந்த மூன்று போட்டிகளும் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.

முதல் T20 – ஒக்டோபர் 9
இரண்டாவது T20 – ஒக்டோபர் 11
மூன்றாவது T20 – ஒக்டோபர் 13

இதன் பின்னர் இலங்கை அணி, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, இலங்கை அணி பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 9 முதல் 13 வரை ராவல்பிண்டியிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 17 முதல் 21 வரை லாகூரிலும் நடைபெறவுள்ளது.

இந்த சுற்றுப்பயணத்திற்கான T20 அணிக்கு குசல் மெண்டிஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 15 வீரர்கள் கொண்ட T20 அணியை இலங்கை கிரிக்கெட் சபை ஏற்கனவே அறிவித்துள்ளது.

மேலும், பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடருக்காக 16 வீரர்கள் கொண்ட இலங்கை அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கும் குசல் மெண்டிஸ் தலைமை தாங்குகிறார்.

ஒக்டோபர் 9 முதல் நவம்பர் 21 வரை நடைபெறும் இந்த சுற்றுப்பயணம், இலங்கை அணிக்கு T20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கியமான சவாலாக அமையவுள்ளது.

MZM. SHIMAK – EDITOR(SPORTS)

தொடர்புடைய செய்திகள்

newsbar
newsbar

பிரபலமானவை