Wednesday, October 21, 2026

உள்நாடு

newsbar

மலையகம்

இந்தியா

newsbar
newsbar

பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை! குசல் மெண்டிஸின் அதிரடி ஆட்டத்தால் ஆறுதல் வெற்றி!

newsbar

பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை! குசல் மெண்டிஸின் அதிரடி ஆட்டத்தால் ஆறுதல் வெற்றி!

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான T20 போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்களைப் பெற்றது. பாகிஸ்தான் அணித்தலைவர் சாஹிப்சாதா ஃபர்ஹான் 76 ஓட்டங்களை விளாசினார்.

169 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கைப் பதிலுக்கு நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 17.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்று வெற்றியைத் தனதாக்கியது.

இலங்கை அணித்தலைவர் குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் 87 ஓட்டங்களைக் குவித்து அணியின் வெற்றிக்கு வலுச்சேர்த்தார். கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் தசுன் ஷானக்க 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இலங்கை அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றபோதிலும், மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரை பாகிஸ்தான் அணி 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

ஆட்டநாயகனாக குசல் மெண்டிஸும், தொடர் நாயகனாக சாஹிப்சாதா ஃபர்ஹானும் தெரிவுசெய்யப்பட்டனர்.

MZM. SHIMAK – EDITOR(SPORTS)

தொடர்புடைய செய்திகள்

newsbar
newsbar

பிரபலமானவை