Wednesday, October 21, 2026

உள்நாடு

newsbar

மலையகம்

இந்தியா

newsbar
newsbar

கல்முனை வழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் சட்டத்தரணிகள் எப்படி ஆஜராக முடியும்? – கலீலுர்ரஹ்மான் சரமாரி கேள்வி!

newsbar

கல்முனை வழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் சட்டத்தரணிகள் சங்கம் எவ்வாறு ஆஜராக முடியும்? – கலீலுர்ரஹ்மான் கேள்வி

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சட்டத்தரணிகள் சங்கம் பங்களிக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு, முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் இவ்வழக்கின் இடையீட்டு மனுதாரருமான எம்.ஏ. கலீலுர்ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.

வழக்கில் இடையீட்டு மனுதாரர் அல்லது பிரதிவாதி என்ற நிலையில் இல்லாதவர்கள், எந்த சட்ட அடிப்படையில் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதங்களை முன்வைக்க முடியும் என்பதை முஸ்லிம் காங்கிரஸ் சட்டத்தரணிகள் சங்கம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

“ஒரு வழக்கில் சட்டரீதியாக ஆஜராகி, தனது தரப்பில் வாதிடுவதற்கான Locus Standi எனப்படும் சட்டத் தகுதி அவர்களுக்கு உள்ளதா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தாம் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான சஞ்சீவ ஜெயவர்த்தன மற்றும் பைஸர் முஸ்தபா தலைமையிலான சட்டத்தரணிகள் குழுக்கள் ஏற்கனவே வழக்கில் ஆஜராகி வருவதாகவும், முக்கியமான சமர்ப்பணங்கள் மற்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கலீலுர்ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள வழக்கில் தற்போது முஸ்லிம் காங்கிரஸ் சட்டத்தரணிகள் சங்கம் பங்களிக்கப்போவதாக அறிவிப்பது தொடர்பிலும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் பார்வையாளர்களாக அமர்ந்து வழக்கின் போக்கை அவதானிப்பதற்கும், பின்னர் ஊடகங்களுக்கு அரசியல் ரீதியான கருத்துக்களை வெளியிடுவதற்கும் அப்பால், இந்த வழக்கில் சட்டரீதியாக அவர்கள் எந்த வகையில் பங்களிக்க முடியும் என்பதை வெளிப்படையாக விளக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வழக்கின் ஆரம்ப கட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மற்றும் அக்கட்சியின் முக்கியஸ்தர்களை சந்தித்து, சட்ட உதவி அல்லது நீதிமன்ற செலவுகளுக்கான நிதியுதவியை கோரிய போதிலும், அப்போது எந்த உதவியும் வழங்கப்படவில்லை என கலீலுர்ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாளை நடைபெறவுள்ள வழக்கு விசாரணை தொடர்பாக முன்னர் குறிப்பிடப்பட்டிருந்த நீதிபதிகள் மாற்றப்பட்டுள்ள நிலையில், தற்போதைய நீதிபதிகள் தொடர்பான தகவல்களைக்கூட சரியாக குறிப்பிடாமல் இருப்பது, இந்த வழக்கு தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் சட்டத்தரணிகள் சங்கம் போதிய கவனம் செலுத்தவில்லை என்பதைக் காட்டுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பான வழக்கில் தங்களது பங்களிப்பு குறித்து முஸ்லிம் காங்கிரஸ் சட்டத்தரணிகள் சங்கம் சட்டரீதியான விளக்கத்தை வழங்க வேண்டும் என்பதே தமது கோரிக்கை எனவும் கலீலுர்ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

newsbar
newsbar

பிரபலமானவை