Thursday, October 22, 2026

உள்நாடு

newsbar

மலையகம்

இந்தியா

newsbar
newsbar

“செய்த பாவங்களே போதும்; இனியும் பாவம் செய்யாதீர்கள்!” – அமைச்சர் சுனில் செனவி அதிரடி

newsbar

“செய்த பாவங்களே போதும்; இனியும் பாவம் செய்யாதீர்கள்!” – அமைச்சர் சுனில் செனவி அதிரடி

“நீங்கள் செய்த பாவங்களே போதும்; இனியும் பாவங்களைச் செய்யாதீர்கள். செய்த குற்றங்களுக்கான தண்டனைகளை அனுபவித்து முடிக்கவே காலம் போதாது” என புத்தசாசன அமைச்சர் சுனில் செனவி தெரிவித்துள்ளார்.

பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ஏற்கனவே செய்த குற்றங்களுக்கான தண்டனைகளை அனுபவிக்கவே நீண்ட காலம் தேவைப்படும் என்றும், சில தண்டனைகளை அனுபவித்து முடிப்பதற்குப் பல பிறவிகள்கூட தேவைப்படலாம் என்றும் கடுமையாக விமர்சித்தார்.

சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவது தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் வழங்கிய ஆணையின் முக்கிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாகும். அந்தப் பொறுப்பை எதிர்பார்த்ததைவிடச் சிறப்பாக அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறையில் அடைக்கப்படுவார் என்றோ, ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என்றோ, முன்னாள் ஜனாதிபதியின் மனைவிகூட விளக்கமறியலை எதிர்கொள்வார் என்றோ மக்கள் எதிர்பார்த்திருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் தனது பொறுப்பை நிறைவேற்றி வருவதாகவும், நீதித்துறை தனக்குரிய கடமையைச் செய்து வருவதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், ஜனாதிபதியும் தனது பொறுப்பை நிறைவேற்றி வருவதாகத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

newsbar
newsbar

பிரபலமானவை