தாய்லாந்து பள்ளியில் துப்பாக்கிச்சூடு – 14 வயது சிறுவன் துணிகரம்!
தாய்லாந்து நொந்தபுரியில் பள்ளி ஒன்றில் 14 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், குறைந்தது 7 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டின் பிரதமர் அனுதின் சார்ன்விரகுல் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் சிறுவன், வீட்டில் தாத்தா, பாட்டி இருவரையும், பள்ளியில் ஐந்து பேரையும் கொன்றுவிட்டு, தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாக காவல்துறை கூறியுள்ளது. பள்ளியில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
மேலும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் 9 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக பிரதமர் அனுதின் சார்ன்விரகுல் கூறியுள்ளார். “இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்திருப்பது மிகவும் கொடுமையானது,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென்கிழக்கு ஆசியாவிலேயே தாய்லாந்து பொதுமக்களிடம் அதிக எண்ணிக்கையிலான துப்பாக்கிகள் கைவசம் இருக்கும் சூழலில், இந்த ஆண்டில் தாய்லாந்தில் நிகழ்ந்த இரண்டாவது பள்ளித் துப்பாக்கிச் சூடு சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.



