இலங்கைக்கு முன் நிற்கும் பாகிஸ்தான் சவால்!
புதிய கேப்டன் தலைமையில் களமிறங்கும் பாகிஸ்தான் – குசல் மெண்டிஸ் தலைமையில் இலங்கை!
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட T20I தொடர் ஒக்டோபர் 9ஆம் திகதி ராவல்பிண்டியில் ஆரம்பமாகிறது. 2ஆவது போட்டி ஒக்டோபர் 11ஆம் திகதியும், 3ஆவது போட்டி ஒக்டோபர் 13ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.
இந்த தொடரில் பாகிஸ்தான் அணியை சாஹிப்சாதா ஃபர்ஹான் வழிநடத்துகிறார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு தலைமை தாங்கிய பின்னர், தேசிய T20 அணியின் கேப்டன் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் T20 கேப்டன் சல்மான் அலி ஆகா, இலங்கைக்கு எதிரான T20 தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை.
இலங்கை அணியை குசல் மெண்டிஸ் வழிநடத்துகிறார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் காயம் காரணமாக விலகியிருந்த அவர், தற்போது T20 அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.
இலங்கைக்கு இந்த தொடரில் முக்கியமான இரண்டு வீரர்கள் இல்லாதது பின்னடைவாக அமைந்துள்ளது.
பத்தும் நிசங்க மற்றும் வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக T20 தொடரில் இடம்பெறவில்லை. இருவரும் பின்னர் நடைபெறும் ODI முத்தரப்பு தொடருக்குத் தகுதி பெறும் நோக்கில் உடற்தகுதி பரிசோதனைகளை எதிர்கொள்ளவுள்ளனர்.
MZM. SHIMAK – EDITOR(SPORTS)



