Thursday, October 22, 2026

உள்நாடு

newsbar

மலையகம்

இந்தியா

newsbar
newsbar

மீண்டும் காவி உடையில் ஞானசார தேரர்

newsbar

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள ஞானசார தேரருக்கு காவி உடை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பள்ளேதென்ன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலுள்ள தேரர்களைச் சிறைச்சாலையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லும்போது காவி உடை அணிந்து அழைத்துச் செல்லக்கூடிய வகையில் சிறைச்சாலை விதிகள் திருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய ஞானசார தேரரைக் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு நாளை அழைத்துச் செல்லும்போது அணிந்து செல்வதற்காக காவி உடை ஒன்று ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்படும் தேரர் ஒருவரும் சிறையில் அடைக்கப்படும் போது சிறைக் கைதிகளின் ஆடையை அணிய வேண்டும் என்பதே நடைமுறையாகும்.

அந்த விதியின் கீழ் ஞானசார தேரருக்கு சிறை ஆடை வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

newsbar
newsbar

பிரபலமானவை