🚨 இமாச்சலில் பயங்கர பேருந்து விபத்து – 7 பேர் பலி, 11 பேர் படுகாயம்
இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம், சம்பா மாவட்டத்தில் இன்று (08) அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தீசா–பைராகர் மலைப்பாதையில் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதையிலிருந்து விலகி பள்ளத்தில் உருண்டு விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் பேருந்து பலத்த சேதமடைந்துள்ளது.
🚑 மீட்புப் பணிகள் தீவிரம்
விபத்து இடம்பெற்றதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மலைப்பாதையில் இடம்பெற்ற இந்த கோர விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



