Wednesday, October 21, 2026

உள்நாடு

newsbar

மலையகம்

இந்தியா

newsbar
newsbar

நோபல் அமைதிப் பரிசு அறிவிப்பால் ட்ரம்ப் கடும் அதிருப்தி! நவநீதம் பிள்ளை தேர்வுக்கு கடும் விமர்சனம்

newsbar

 

 

 

நோபல் அமைதிப் பரிசு அறிவிப்பால் ட்ரம்ப் கடும் அதிருப்தி! நவநீதம் பிள்ளை தேர்வுக்கு கடும் விமர்சனம்

போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்த தென்னாப்பிரிக்க நீதிபதியும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவருமான நவநீதம் பிள்ளைக்கு 2026ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இந்தத் தெரிவு அவமானகரமானது என்றும், நோர்வே நாட்டுக்கு இது அழியாத களங்கம் என்றும் ட்ரம்ப் சாடியுள்ளார். நோபல் அமைதிப் பரிசின் மதிப்பு சில தீவிர சித்தாந்தவாதிகளால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நோபல் பரிசு வெற்றியாளர் அறிவிக்கப்பட்ட நிகழ்வில் கருத்துத் தெரிவித்த நவநீதம் பிள்ளை, “இன்னும் கொஞ்சம் கைதட்டினால், இந்தப் பரிசை ட்ரம்புடன் பகிர்ந்துகொள்வேன்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு அமைதிப் பரிசைப் பெற்ற வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, தனது தங்கப் பதக்கத்தை ட்ரம்புக்கு வழங்கிய சம்பவத்தை நினைவூட்டும் வகையில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டதாகக் கருதப்படுகிறது.
இதற்குப் பதிலளித்த ட்ரம்ப், நவநீதம் பிள்ளையைப் பற்றி தமக்குத் தெரியாது என்று கூறியதுடன், அமைதிப் பரிசு அமெரிக்காவுக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

2025 ஜனவரியில் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதிலிருந்து, நோபல் அமைதிப் பரிசைப் பெறுவதில் ட்ரம்ப் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்துள்ளார். இந்நிலையில், இந்த விருது தொடர்பான அவரது கருத்துகள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

newsbar
newsbar

பிரபலமானவை