Wednesday, October 21, 2026

உள்நாடு

newsbar

மலையகம்

இந்தியா

newsbar
newsbar

தென்னாபிரிக்காவுக்கு அதிர்ச்சித் தோல்வி! 214 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா அபார வெற்றி!

newsbar

தென்னாபிரிக்காவுக்கு அதிர்ச்சித் தோல்வி! 214 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா அபார வெற்றி!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 214 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியா 1–0 என முன்னிலை பெற்றுள்ளது.

டர்பனில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 390 ஓட்டங்களைக் குவித்தது. மத்திய வரிசையில் களமிறங்கிய மெட் ரென்ஷா 190 ஓட்டங்களைப் பெற்று அணியின் வலுவான ஓட்ட எண்ணிக்கைக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 284 ஓட்டங்களைப் பெற்றது. இதனால் அவுஸ்திரேலியா 106 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 314 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது. மெட் ரென்ஷா மீண்டும் 82 ஓட்டங்களைப் பெற்று அசத்தினார்.

421 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 206 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் 49 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டத்தைச் சிதறடித்தார்.

இரு இன்னிங்ஸ்களிலும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி மொத்தமாக 272 ஓட்டங்களைப் பெற்ற மெட் ரென்ஷா ஆட்டநாயகனாகத் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஒக்டோபர் 18ஆம் திகதி கெபேஹாவில் ஆரம்பமாகவுள்ளது.

MZM. SHIMAK – EDITOR(SPORTS)

தொடர்புடைய செய்திகள்

newsbar
newsbar

பிரபலமானவை