ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலுள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியதை, ஈரான் நிராகரித்துள்ளது.
ஈரான், அமெரிக்கா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர பல கட்டமாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றது. ஆனாலும், போர் நிறுத்தம் ஏற்படவில்லை. இந்த சூழலில் ”ஹோர்முஸ் நீரிணை மீது அமெரிக்கா தனது முழு கட்டுப்பாட்டை கொண்டுள்ளது. அதை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வோம்” என ஜனாதிபதி ட்ரம்ப் கூறியிருந்தார்.
இந்த ஜனாதிபதி ட்ரம்ப் கூற்றை ஈரான் நிராகரித்துள்ளது. இது குறித்து ஈரான் தேசிய பாதுகாப்பு சபையின் தலைவர் மொஹ்சென் ரெஸாயி வெளியியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது,
அமெரிக்கா அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் வரை, முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முழுமையாக மீண்டும் திறக்காது. ஈரான் தனது நிலைப்பாட்டில் தெளிவாகவுள்ளது.
அமெரிக்கா போரையும், முற்றுகையையும் முடிவுக்குக் கொண்டுவந்து, ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவித்து, லெபனான் மற்றும் காஸா உட்பட பிராந்தியம் தழுவிய போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளும் வரை ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படாது.
ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலுள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் கூறும் கூற்றுகளும், மீண்டும் மீண்டும் வெளியிடும் பதிவுகளும் யதார்த்தத்தை மாற்றிவிடாது. இவ்வாறு மொஹ்சென் ரெஸாயி கூறியுள்ளார்.



