Thursday, October 22, 2026

உள்நாடு

newsbar

மலையகம்

இந்தியா

newsbar
newsbar

அபுதாபியில் டெஸ்ட் போர்! ஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் நேருக்கு நேர்!”

newsbar

ஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் டெஸ்ட் மோதல்!

ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி நாளை (09.10.2026) அபுதாபியில் ஆரம்பமாகிறது. சையத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி ஒக்டோபர் 9 முதல் 13ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மத் ஷா தலைமை தாங்கும் நிலையில், பங்களாதேஷ் அணியை நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ வழிநடத்துகிறார். இதுவரை இரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்துள்ளதால், இந்த ஒரே டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

பங்களாதேஷ் அணி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஐக்கிய அரபு இராச்சிய அணியுடன் இரண்டு நாள் பயிற்சி போட்டியில் விளையாடியுள்ளதுடன், ஆப்கானிஸ்தானும் சொந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்த எதிர்பார்க்கிறது. இரு அணிகளும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சந்திப்பதால், துடுப்பாட்டம் மற்றும் சுழற்பந்து வீச்சு இந்தப் போட்டியில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MZM. SHIMAK – EDITOR(SPORTS)

தொடர்புடைய செய்திகள்

newsbar
newsbar

பிரபலமானவை