Thursday, October 22, 2026

உள்நாடு

newsbar

மலையகம்

இந்தியா

newsbar
newsbar

15 வயது வைபவ் சூர்யவன்ஷிக்கு காத்திருக்கச் சொன்ன கம்பீர் – இந்திய அணியில் பரபரப்பு!

newsbar

15 வயது வைபவ் சூர்யவன்ஷிக்கு காத்திருக்கச் சொன்ன கம்பீர் – இந்திய அணியில் பரபரப்பு!

இந்திய கிரிக்கெட்டின் இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது சிறப்பான ஆட்டத்திற்குப் பிறகும் இந்திய T20 அணியின் ஆடும் 11 வீரர்களில் உடனடியாக இடம்பிடிக்க முடியாமல் போகலாம் என தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

15 வயதான வைபவ், சமீபத்திய ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு எதிரான அரையிறுதியில் 21 பந்துகளில் 38 ஓட்டங்கள் எடுத்திருந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான தங்கப் பதக்கப் போட்டியிலும் 9 பந்துகளில் 15 ஓட்டங்கள் எடுத்தார்.

இதற்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டிலும் வைபவ் கவனம் ஈர்த்துள்ளார். 15 வயது 99 நாட்களில் இங்கிலாந்துக்கு எதிராக T20I அறிமுகமான அவர், இந்தியாவின் இளம் சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற சாதனையைப் பெற்றார். பின்னர் சிம்பாப்வே அணிக்கு எதிராக சர்வதேச அரைச்சதம் அடித்த இளம் வீரராகவும் சாதனை படைத்தார்.

தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட T20 தொடருக்கான இந்திய அணியிலும் வைபவ் இடம்பெற்றுள்ளார். இந்தத் தொடர் ஒக்டோபர் 6ஆம் திகதி ஆரம்பமாகிறது.

ஆனால், அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரின் தொடர்ச்சியான செயல்பாடுகளை கருத்தில் கொண்டு, வைபவுக்கு உடனடியாக ஆடும் வாய்ப்பு வழங்கப்படாமல் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கம்பீர் கூறுகையில், நீண்ட காலமாக சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்களை சில போட்டிகளில் தோல்வியடைந்ததற்காக உடனடியாக நீக்கிவிட்டு இளம் வீரரை களமிறக்குவது சரியான அணுகுமுறை அல்ல என்றும், அணித் தேர்வு சமூக வலைத்தள அழுத்தத்தின் அடிப்படையில் அல்ல; அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தரக்கூடிய சிறந்த கலவையின் அடிப்படையிலேயே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

MZM. SHIMAK – EDITOR(SPORTS)

தொடர்புடைய செய்திகள்

newsbar
newsbar

பிரபலமானவை