ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்தியா!
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆண்கள் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 19 ஓட்டங்களால் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
நிஷின் நகரில் நடைபெற்ற T20 இறுதிப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடியது. 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 211 ஓட்டங்களை இந்தியா பெற்றது.
இந்திய அணிக்காக அபிஷேக் சர்மா 61 ஓட்டங்களையும், திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களையும் அதிரடியாக பெற்றனர்.
212 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 192 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
பாகிஸ்தான் அணியில் ஹசன் நவாஸ் 96 ஓட்டங்களை அதிரடியாக பெற்ற போதிலும், வெற்றியைப் பெற முடியவில்லை. இந்தியாவின் பந்துவீச்சில் அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சிவம் துபே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன் மூலம் 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் கிரிக்கெட் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.
மேலும், இந்த வெற்றியின் மூலம் ஆசிய விளையாட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் இரண்டிலும் இந்தியா தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
MZM. SHIMAK – EDITOR(SPORTS)



