Thursday, October 22, 2026

உள்நாடு

newsbar

மலையகம்

இந்தியா

newsbar
newsbar

250 ஓட்டங்கள் இலக்கு… இந்தியாவை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் வரலாற்று வெற்றி!

newsbar

250 ஓட்டங்கள் இலக்கு… இந்தியாவை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அதிரடி வெற்றி!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ரி20 போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி 6 விக்கெட்டுகளால் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 249 ஓட்டங்களைக் குவித்தது. இந்திய அணி சார்பில் சஞ்சு சாம்சன் 41 பந்துகளில் 82 ஓட்டங்களையும், இஷான் கிஷன் 43 ஓட்டங்களையும், ஷ்ரேயஸ் ஐயர் 40 ஓட்டங்களையும் பெற்றனர். திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களைச் சேர்த்தார்.

250 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கைப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 252 ஓட்டங்களைப் பெற்று வெற்றியைத் தனதாக்கியது.

அணியின் தலைவர் ஷாய் ஹோப் 6 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களைக் குவித்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 84 ஓட்டங்களை விளாசினார். ரொமாரியோ ஷெப்பர்ட் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களைப் பெற்றார்.

இதன் மூலம், 250 ஓட்டங்கள் என்ற இலக்கை வெற்றிகரமாகத் துரத்தி, ரி20 கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச வெற்றிகரமான ஓட்டத் துரத்தலை மேற்கிந்தியத் தீவுகள் அணி பதிவு செய்துள்ளது.

 

MZM shimak –  Editor (sports )

 

தொடர்புடைய செய்திகள்

newsbar
newsbar

பிரபலமானவை