Wednesday, October 21, 2026

உள்நாடு

newsbar

மலையகம்

இந்தியா

newsbar
newsbar

“36 வயதில் மீண்டும் இந்தியா! 4 ஆண்டுகளுக்குப் பிறகு புவனேஷ்வர் குமாருக்கு T20I அழைப்பு!”

newsbar

4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பிய புவனேஷ்வர் குமார்!

36 வயதிலும் சாதித்துக் காட்டிய அனுபவ வேகப்பந்து வீச்சாளர் – நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம்!

இந்திய அணியின் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இந்திய T20I அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான இந்திய அணியை BCCI நேற்று (ஒக்டோபர் 6) அறிவித்தது. இந்த அணியில் புவனேஷ்வர் குமார் இடம்பெற்றுள்ளமை முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.

புவனேஷ்வர் குமார் கடைசியாக 2022 நவம்பரில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவுக்காக T20I போட்டியில் விளையாடினார். அதன் பின்னர் தேசிய அணியில் இடம்பெறவில்லை.

ஆனால் கடந்த இரண்டு IPL தொடர்களில் Royal Challengers Bengaluru (RCB) அணிக்காக சிறப்பாக செயல்பட்டது அவருக்கு மீண்டும் இந்திய அணியின் கதவைத் திறந்துள்ளது. கடந்த இரண்டு IPL சீசன்களில் மொத்தம் 45 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். குறிப்பாக 2026 IPL தொடரில் 28 விக்கெட்டுகளை 7.95 என்ற economy rate-ல் வீழ்த்தியிருந்தார்.

புதிய பந்தில் swing செய்யும் திறன் மற்றும் powerplay ஓவர்களில் விக்கெட் வீழ்த்தும் அனுபவம் காரணமாக, நியூசிலாந்து ஆடுகளங்களில் புவனேஷ்வரின் அனுபவம் இந்தியாவுக்கு முக்கிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய T20I அணி

ஷ்ரேயாஸ் ஐயர் (தலைவர்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், திலக் வர்மா (துணைத் தலைவர்), அக்சர் படேல், சிவம் துபே, நிதிஷ் குமார் ரெட்டி, நமன் தீர், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ், அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ்.

முக்கியமாக, ஜஸ்பிரித் பும்ரா T20I தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளார். ODI மற்றும் Test போட்டிகளுக்கான இந்திய அணிகள் பின்னர் அறிவிக்கப்படவுள்ளன.

நியூசிலாந்து – இந்தியா T20I தொடர்

  • 1ஆவது T20I: ஒக்டோபர் 22 – Christchurch
  • 2ஆவது T20I: ஒக்டோபர் 24 – Christchurch
  • 3ஆவது T20I: ஒக்டோபர் 27 – Wellington
  • 4ஆவது T20I: ஒக்டோபர் 30 – Auckland
  • 5ஆவது T20I: நவம்பர் 1 – Hamilton

MZM. SHIMAK – EDITOR(SPORTS)

தொடர்புடைய செய்திகள்

newsbar
newsbar

பிரபலமானவை