Wednesday, October 21, 2026

உள்நாடு

newsbar

மலையகம்

இந்தியா

newsbar
newsbar

அதிரடி ஆட்டம்! இந்தியாவை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள்! தொடர் 2–2 எனச் சமநிலை!

newsbar

அதிரடி ஆட்டம்! இந்தியாவை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள்! தொடர் 2–2 எனச் சமநிலை!

இந்தியாவுக்கு எதிரான நான்காவது T20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 24 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரை 2–2 எனச் சமநிலைக்குக் கொண்டுவந்துள்ளது.

ஹைதராபாத்தில் நேற்று (ஒக்டோபர் 14) நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 247 ஓட்டங்களைக் குவித்தது.

அணித்தலைவர் ஷாய் ஹோப் 50 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களை விளாசினார். ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களையும், ஷிம்ரோன் ஹெட்மையர் 33 ஓட்டங்களையும் பெற்றனர்.

248 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, சஞ்சு சாம்சனின் அதிரடியான 56 ஓட்டங்களுடன் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றது. அவர் 23 பந்துகளில் இந்த ஓட்டங்களைக் குவித்தார்.

எனினும், மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் இந்திய அணி 19.3 ஓவர்களில் 223 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கீமோ போல் 41 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக் கனவைத் தகர்த்தார்.

சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி சதமடித்த ஷாய் ஹோப் ஆட்டநாயகனாகத் தெரிவுசெய்யப்பட்டார். தொடரைத் தீர்மானிக்கும் ஐந்தாவது T20 போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதி பெங்களூருவில் நடைபெறவுள்ளது.

MZM. SHIMAK – EDITOR(SPORTS)

தொடர்புடைய செய்திகள்

newsbar
newsbar

பிரபலமானவை